சபரிமலை பக்தர்கள் சென்ற கார் விபத்து!

Advertisements

கம்பம்: 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் எட்டு வயது சிறுவன் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் (42). இவர் தனது மகன் சித்தார்த் (8) உள்ளிட்ட நான்கு பேருடன் சபரிமலைக்கு காரில் சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்றார். நேற்று இரவு தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் தமிழக எல்லையான கம்பம் மெட்டு வனச்சாலையை கடந்து கம்பம் புறவழிச் சாலையை அடைந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.

விபத்து சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து காரினுள் சிக்கியிருந்த ஐந்து பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் பலத்த தலைக் காயத்துடன் சிறுவன் சித்தார்த் உயிரிழந்தார் காயமடைந்த மற்றவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துகுறித்து கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *