
பதிமூன்று சீட்டும் ஜோக்கர் ஆகவே உள்ளது போல, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எல்லாருமே ஜோக்கராக உள்ளனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்த ஆட்சி மாற்றம் ஒன்றும் பெரிய மாற்றம் அல்ல, இதற்கு 35 சதவீதம் பேர்தான் காரணமாக இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 20 சதவீதம் பேர் அவரது ரசிகர்கள் என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் தருவது போல, இணையத்தளத்தில் தொடர்ந்து இனிப்பானவைப் பேசி வந்த இன்புளுயன்சர்களை தவெக விலைக்கு வாங்கி, திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளாகப் பரப்பி ஆட்சியைப் பிடித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, தற்போது பெற்ற வாக்குகளை மீண்டும் பெற முடியாது என்ற காரணத்தினால்தான், அதிமுகவில் இருப்பவர்களை அவர்கள் வலைவீசிப் பிடித்து வருகின்றனர் என்று கூறினார்.
இப்போதைய அரசின் முதலமைச்சர் விஜய் அல்ல, ஆதவ் அர்ஜுனாதான் நிழல் முதலமைச்சராகப் பின்னணியில் இருந்து இந்த அரசை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும், பதிமூன்று சீட்டும் ஜோக்கர் ஆகவே உள்ளது போல, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எல்லாருமே ஜோக்கராக உள்ளனர் என்று விமர்சித்தார்.



