
பாலியல் உறவுச் சம்பவம் அவர்களுக்கு இடையிலான காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. காமத்தால் நடந்ததாகத் தெரியவில்லை எனக்கூறி, காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் 26 வயதான வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். 2020-ம் ஆண்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரைத் தேடிய போலீசார் சிறுமியைக் கண்டுபிடித்ததுடன், அழைத்துச் சென்ற காதலனையும் கைது செய்தனர். அவர்மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நான் வீட்டை விட்டு விரும்பியே வெளியேறினேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் காதலன் வாக்குறுதி அளித்தார். இதனால் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். மகாராஷ்டிராவில் வெளியே பல்வேறு இடங்களில் தங்கியிருந்தோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் காதலன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமி மைனர் ஆனாலும், விருப்பப்பட்டே வீட்டை விட்டுக் காதலனுடன் தங்கியதாகப் போலீசிடம் கூறியுள்ளார். பாலியல் உறவுச் சம்பவம் அவர்களுக்கு இடையிலான காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. காமத்தால் நடந்ததாகத் தெரியவில்லை எனக்கூறி, காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

