S. Regupathy: பாஜக முதலில் மூன்று சதவீதத்தை தாண்டட்டும்.. அமைச்சர் பதிலடி!

Advertisements

சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கண்ணை மூடிச் சொல்லிக் கொண்டு இருக்கலாம். நடப்பதை தான் பார்க்க வேண்டும். முதலில் மூன்று சதவீதத்தை பாஜக ஓட்டு வங்கியில் தாண்டட்டும். அப்புறம் 30 சதவீதத்திற்கு போகலாமெனப் புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: எதிரிகளைப் பலவீனமாக எடை போடமாட்டோம் ஆனால் அதே நேரத்தில் எங்களுடைய சக்தி என்ன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திமுகவை எந்த ஒரு சக்தியாலும் அழித்துவிட ஒலித்து விட முடியாது. இந்திய அரசியலில் யாருக்கும் கிடையாது. தமிழ்நாடு மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சிதான் திமுக.

சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கண்ணை மூடிச் சொல்லிக் கொண்டு இருக்கலாம். நடப்பதை தான் பார்க்க வேண்டும். முதலில் மூன்று சதவீதத்தை பாஜக ஓட்டு வங்கியில் தாண்டட்டும். அப்புறம் 30 சதவீதத்திற்கு போகலாம்.ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும் உதயசூரியனை மறைக்க முடியாது.‌ தமிழ்நாட்டில் மறைக்க முடியாத சக்தி தான் திமுக.

எங்கள் எம்பிக்கள் மக்களுடன் தான் இருக்கிறார்கள் அவர்களது எம்பிக்கள் காணாமல் போனதை தற்பொழுது மக்களுக்குச் சுவரொட்டி நினைவுபடுத்தி வருகின்றனர். எங்கள் எம்பிக்களை எப்போதும் பார்க்கலாம். அவர்களது எம்பிக்கள் காணாமல் போனதால் தற்பொழுது சீட்டு கொடுப்பதற்காகக் காணவில்லை என்று சுவரோட்டி மூலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வெற்றியைச் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்கள் இதயங்களில் இருக்கக்கூடியவர் அவர். அவரது உழைப்பு என்பது திமுக தொண்டர்களாலும் தமிழ்நாடு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அண்ணாமலை போன்றவர்கள் அதை மூடி மறைக்க முயன்றாலும் உதாசீனப்படுத்தினாலும். மக்கள் இதயத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனி இடம் இருக்கிறது.

பாஜகவில் பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்களைத் தெரிந்து சேர்க்கின்றனர். ஆனால் திமுக 2 கோடி உறுப்பினர்களை வைத்துள்ள மிகப்பெரிய இயக்கம். நாங்கள் ஒவ்வொருவரையும் பூதக்கண்ணாடி வைத்து அவர்களது குணாதிசயங்கள் என்ன என்பதை பார்க்க முடியாது. எங்களது கவனத்தில் தவறு செய்தார்கள் என்று வந்துவிட்டால் திமுக எந்தக் குற்றவாளியையும் சேர்க்காது அனுமதிக்காது அதற்கு உறுதுணையாகவும் உடனடியாகவும் இருக்காது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இழுபரி என்பது சொல்வதெல்லாம் வெளியே சொல்லும் புரளிகள் தான். கூட்டணியில் உள்ள பேச்சுவார்த்தை அனைத்தும் சுமுகமாகப் போய்க் கொண்டுள்ளது. அது நாடறிந்த விஷயம்.

திமுக கூட்டணியில் உள்ளவர்களிடம் பிரச்சனையை ஏற்படுத்தி இந்தக் கூட்டணியில் உள்ளவர்களை அழைப்பவர்கள் அழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் தோழமைக் கட்சி தோழமையாக இருக்கிறது அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மீது வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர்களும் திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி உருவாக அடிப்படையாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதனால்தான் திமுகவே இருக்காது என்று வேகப்பட்டு பேசக்கூடிய அளவிற்கு பிரதமர் மோடி தரம் தாழ்ந்து வந்திருக்கிறார். அவரு அவர் வந்தது இந்தியா கூட்டணியின் வெற்றியைக் காட்டுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் சுற்றுச்சூழன்று என்று உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வெற்றியைப் பெற்று தருவார். எந்த ஒரு தொகுதிகளும் 2 லட்சம் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்திற்கு குறைந்தது இருக்காது அந்த அளவிற்கு நாங்கள் வெற்றி பெறுவோம்… புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *