S. P. Adithanar: சி.பா.ஆதித்தனார் பிறந்ததினம்!

Advertisements

தமிழ்நாட்டின் இதழியல் முன்னோடி, தினத்தந்தி தமிழ் நாளிதழைத் தொடங்கிய திரு.சி.பா.ஆதித்தனார் அவர்கள் பிறந்ததினம்!

சி. பா. ஆதித்தனார் 1905ஆம் ஆண்டு   செப்டம்பர் 27 தேதி பிறந்தார்.  தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.

எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.பின்னர் 1981ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி காலமானார்.இன்று அவருடைய பிறந்ததினம்!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *