S. Kannappan: ஆசிரியர்களுக்குச் சம்பள பிடித்தம் கிடையாது!

Advertisements

சென்னை: அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்குச் சம்பள பிடித்தம் கிடையாது என்று தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்குச் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு எனத் தகவல் வெளியானது. சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுக்கு எதிராகப் போராட்டதில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்குச் சம்பள பிடித்தம் செய்யவில்லை என்றும் தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம், வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டிக் கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது. மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக் கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையைத் தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் (19.02.2024 முதல் 08.03.2024 வரை) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்குப் போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களைச் சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற கடிதங்கள், தெளிவுரைகள் கேட்பதை தவிர்க்குமாறு வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்குச் சம்பள பிடித்தம் கிடையாது என்று தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்குச் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு எனத் தகவல் வெளியான நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *