Trichy:தூக்க கலக்கத்தில் எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு!

Advertisements

தூக்க கலக்கத்தில் பற்பசையென நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி:திருச்சி மாவட்டம் கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று காலை ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசையென நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை (விஷம்) வைத்துப் பல் துலக்கியுள்ளார். பின்னர் வேலைக்குச் சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்துள்ளார்.

இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்க கலக்கத்தில் பற்பசையென நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *