Advertisements

ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவின் ஆத்திரமூட்டும் பேச்சையடுத்து அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு எட்டாம் நாளுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு டிரம்ப் கெடு விதித்திருந்தார். இதற்கு மாறாக ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய முன்னாள் அதிபரும், அந்நாட்டின் பாதுகாப்புக் கவுன்சில் துணைத் தலைவருமான திமித்ரி மெத்வதேவின் பேச்சு டிரம்புக்கு ஆத்திரமூட்டியுள்ளது.
இதையடுத்துப் போருக்குத் தயாராகும் வகையில் அணுவாற்றலால் இயங்கும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேவையான பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
Advertisements


