Ukrainian drone attack: சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

31 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

மாஸ்கோ: உக்ரைன் ராணுவம் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 31 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே 20 மாதங்களுக்கு மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் எல்லை பகுதிகளில் உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில்,31 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதங்கள்குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல் ரஷ்யாவின் மேற்கில் உள்ள உக்ரைனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமீயா மாகாணத்தில் ராணுவ வீரர்களைக் கொண்டு வந்து இறக்கும் உக்ரைனின் திட்டம் முறியடிக்கப்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா வெளியிட்டுள்ள இந்தச் செய்திகள்குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல் உக்ரைன் அதிகாரிகளும் இதுபற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *