
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக 90 ரூபாய் என்கிற அளவைத் தொட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரு டாலர் 89 ரூபாய் 89 காசுகள் என்னும் அளவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 2014ஆம் ஆண்டு மே இறுதியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடியும்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 ரூபாயாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடும்போது கடந்த 11 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.




