Coonoor: திமுக மாவட்ட ஒன்றிய உறுப்பினரைச் சுற்றி வளைத்த போலீஸ்!

Advertisements

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்ற திமுக மாவட்ட ஒன்றிய உறுப்பினர் கணவர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கோடமலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றபொழுது கோடமலை அருகே உள்ள சரவணமலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கோடை மலை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 43 ஜீவ ரத்தினம் 25 ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்ததின் அடிப்படையில் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காட்டுப்பன்றியை வேட்டையாட வந்ததாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குன்னூர் ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவக்குமார் 46 என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் குன்னூர் அருகே உள்ள பார்க் சைடு எஸ்டேட் வாகன ஓட்டுனரான பிரேம்குமார் 48 என்பவரிடமிருந்து காட்டு பன்றியை வேட்டையாடப் பயன்படுத்தும் அவுட்டு காய் எனப்படும் வெடி பொருள் வாங்கியதாகத் தெரிவித்ததின் அடிப்படையில் குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் மற்றும் வனவர்கள் ராஜ்குமார் கோபாலகிருஷ்ணன் முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் திலீப் லோகேஷ் விக்ரம் ஞானசேகர் ராம்குமார் அடங்கிய தனிப்படையினர் பார்க் சைடு எஸ்டேட் பகுதிக்குச் சென்று பிரேம்குமார் என்பவர் வீட்டைச் சோதனை இட்டபொழுது அவுட்காய் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் மற்றும் காட்டுக்கோழிகளை பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள் மற்றும் பன்றியைக் கறுக்க பயன்படுத்தப்படும் ப்ளோ லேம்ப் வேட்டைக்கு பயன்படுத்திய மாருதி ஆல்டோ கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நால்வரையும் கைது செய்த வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ஆம் வருடம்(9)ன்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர் பின்பு மருத்துவ பரிசோதனைக்குப் பின் உதகை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *