குஜராத்தில் நடந்த ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியின்போது திருடியதாகத் திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது.
இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் உள்ளிட்டவை திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த ஜெகன் பாலசுப்பிரமணியம், தீபக் பார்த்திபன், குணசேகர் உமாநாத், வீரபத்ரன், அகரம் கண்ணன் ஆகிய 5 பேரை டெல்லியில் கைது செய்தனர். மேலும், இந்தத் திருட்டு கும்பலின் தலைவன் மதுசூதனை போலீசார் தேடி வருகின்றனர்.

