மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். இந்த நிலையில் ஜாமின் வழங்க கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.அப்போது மணீஷ் சிசோடியா மீதான வழக்கை 6 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் அவருக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.Manish Sisodia
