இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முதன்முதலாக நம்பிக்கையில்லா கடிதம் அளித்த சூயெல்லா பிரேவர்மன்.. பதவி நீக்கத்தின் எதிரொலி..!
பாலஸ்தீன பேரணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட இங்கிலாந்து உள்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சூயெல்லா பிரேவர்மனை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி சுனக் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சூயெல்லா பிரேவர்மன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீது செவ்வாயன்று கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி 1,318 வார்த்தைகள் கொண்ட கடிதத்தை சமர்பித்துள்ளார்.
தேர்தல் தோல்வியைத் தவிர்ப்பதற்காக சுனக் பல்வேறு யுத்திகளை கையாண்டதாக சில ரகசியங்களை வெளியிட்டுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பெருத்த ஏமாற்றத்தையும் வலியையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பின் அரசின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார்.
உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது பல உயரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார். 20000 காவல் அதிகாரிகள், நியமனம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை செவ்வனே செய்ததாகவும் தெரிவித்தார். இப்படியாக ஏழு கருத்துக்களைக் கூறி முதன்முதலாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.