“ஆபாச பேச்சு திமுகவின் வாடிக்கையா?” – துரை வைகோ கண்டனம்!

திமுக ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தற்போது வாடிக்கையாகிவிட்டதாக மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் இருக்கலாம், அதுதான் நாகரிகமான அரசியல் என்று தெரிவித்தார். ஆனால், திமுக ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது கட்சித் தலைவர்களுக்கே இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் மாற்று முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். குதிரை பேரம் நடத்தியவர்கள் மு.க.ஸ்டாலினும் எடப்பாடியும் தான் என்று தெரிவித்தார். ஏனென்றால் இரு கட்சிகளும் இணையும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *