Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்;காங்கிரஸ் அறிவிப்பு!

Chennai Air Show 2024 Death: சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவைத் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களே உயர்மட்ட விசாரணை கோரி உள்ளனர்.

இந்த நிலையில், சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவைத் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *