“அதிமுகவுக்கு, பாமக இல்லையென்றால் 47 கூட கிடையாது!” – ஆதவ் அர்ஜுனா!

பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் கூட வென்றிருக்க முடியாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி மிகவும் ஆபாசமாக பேசுவதாகக் குற்றம்சாட்டினார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் விஜய் மீது தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதனால், இன்றைய அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது போல் இல்லை என்று கூறினார். அம்மா இருந்தபோது கொங்கு மண்டலத்தில் 50 இடங்களில் வென்ற அதிமுக தற்போது ஏன் வெற்றி பெறவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்தத் தேர்தலில் பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் கூட வென்றிருக்க முடியாது என்று தெரிவித்தார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனிடம் அடகு வைக்க வேலை செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பெண்களை மையப்படுத்தி ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் வாடிக்கை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *