2050-ம் ஆண்டுகளில் ரோபோ உடலுறவு சாதாரண ஒரு உடலுறவு போலப் பழகிவிடும்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் ரோபோ ஒன்று பெண்ணைக் காதலிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால், நம்மைச் சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்தக் கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. குறிப்பாக AI தொழில் நுட்பத்தால் செய்ய முடியாதது ஒன்றுமே கிடையாது என அதனை உருவாக்கும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதற்காகத் தனி பாடப்பிரிவுகளும், கோர்ஸ்களும் வந்துவிட்டது எதிர்கால நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார். ஆம் வரும் காலங்களில், ஆண்களைவிட ரோபோட்டுடனே பெண்கள் உடலுறவு கொள்வதற்கு விரும்புவார்கள் என அவர் கூறியிருக்கிறார்.
மேலும் AI தொழில்நுட்பம் வருவதற்கு முன்னதாகவே இந்த ரோபோட்டின் ஆராய்ச்சிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாவும் வரும் காலங்களில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் இன்னும் 10 ஆண்டுகளில் பெண்கள் ஆண்களைத் தவிர்த்து விட்டு ரோபோ உடலுறவு கலாச்சாரம் உருவாகி விடும்.
மேலும், 2050-ம் ஆண்டுகளில் ரோபோ உடலுறவு சாதாரண ஒரு உடலுறவு போலப் பழகிவிடும். மேலும், ரோபோக்கள் மனிதர்களுடன் புதுவிதமான அன்பை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.