Today rasipalan:இன்றைய ராசிபலன் – 10.10.24

Advertisements

இன்றைய ராசிபலன் – 10.10.24

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 24-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 02-06 வரை மூலம் பின்பு பூராடம்

திதி: இன்று காலை 08-06 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் மாலை: 10.30 – 11.00

ராகு காலம் பிற்பகல்: 1.30 – 3.00

எமகண்டம் காலை: 6.00 – 7.30

குளிகை காலை: 9.00 – 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 1.30 – 1.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 – 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: கிருத்திகை, ரோகினி

ராசிபலன்:

மேஷம்


உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் தொய்வு ஏற்படாது. வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்


இன்று கிருத்திகை மற்றும் ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்


வெளிபூர் பயணம் வெற்றி தரும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்


வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் சேருவர். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்


உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று கூடும். சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தைக் கையாளுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

 

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவர். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தேகம் சிறக்கும். வங்கியிலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கன்னி


மருத்துவர்களுக்குப் பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்


உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். பழைய வாகனம் நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்


மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காகக் கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு


தேக்க நிலையில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். பல் சொத்தைச் சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. பல்லைப் பரிசோதனை செய்வது நல்லது. நீண்ட காலமாகக் கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்


உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். இன்று பணப் பிரச்சினை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்


திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்


நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *