Regional Meteorological Centre: இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

Advertisements

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரண்டு நாட்கள்  கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, நாளை தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *