Regina Cassandra: அஜித் படத்தில் இணைகிறார்!

அஜித் படத்தில் இணையும் ரெஜினா!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தொடங்கி உள்ளது. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்க ரெஜினா கசாண்ட்ராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


ரெஜினா கண்டநாள் முதல் படம்மூலம் அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வெற்றியால் பிரபலமானார். நிர்ணயம், ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்தி படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துப் பரபரப்பு ஏற்படுத்தினார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

விடா முயற்சி படத்தில் நடிக்க முதலில் ஹூமா குரோஷியை முடிவு செய்து இருந்தனர். அவருக்குக் கால்ஷீட் பிரச்சினைகள் இருப்பதால் நடிக்கவில்லை. இதையடுத்து ரெஜினாவை தேர்வு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித் படத்தில் நடிப்பதால் ரெஜினா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *