Neyveli Thermal Power Station: பாதுகாப்பு படை வீரர்களிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள்!

Advertisements

பாதுகாப்பு படை வீரர்களிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள்!

நெய்வேலி : என்எல்சி அனல் மின் நிலையத்தில் காப்பர் கம்பிகள் திருடிய 5 பேரைப் போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்எல்சி இரண்டாம் அனால் மின் நிலையத்தில், மத்திய தொழிலாகப் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனல் மின் நிலைய குடோன் பகுதியில் சிலர் காப்பர் கம்பிகளைத் திருடிக் கொண்டிருந்ததை பார்த்துப் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களைப் பிடித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நெய்வேலியை அடுத்த ஆதண்டார்கொல்லை பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சதீஷ்(35), மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஏசுராஜ் மகன் ஜான் பெர்னாண்டஸ்(31), பழைய தாண்டவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் பாலமுருகன்(31), தொப்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் குணசீலன்(22) மற்றும் முத்துமணி(22) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள 22 மீட்டர் காப்பர் வயரை பறிமுதல் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *