அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் புகழாரம்!

Advertisements

மும்பை:

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிச் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன் என அபிஷேக் சர்மாவின் இந்திய முன்னாள் வீரரும், அவரின் ஆலோசகருமான யுவராஜ் சிங் புகழாராம் சூட்டியுள்ளார்.

நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா. உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன். பெருமையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *