ஆல் ஏரியாலையும் நாங்க தான் கில்லி..! கொண்டாட்டத்தில் ஆர்சிபி பேன்ஸ்..!

Advertisements

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி மூன்று வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. வான்கடே மைதானத்தில் 222 ரன்கள் என்ற இலக்கை ஆர் சி பி அணி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது.
இதன் மூலம் கொல்கத்தாவில் கேகேஆர் அணியையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியையும் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி ஆர் சி பி சாதனை படைத்திருக்கிறது.

இதனால் ஆர் சி பி அணியின் வெற்றியை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஆர் சி பி அணி சுமாராக விளையாடினாலே அவர்கள் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. இதில் அபாரமாக விளையாடிவிட்டதால் சமூக வலைத்தளத்தில் ஆர்சிபி கொடி பறக்கிறது. இதனால் போற வர ரசிகர்களை எல்லாம் ஆர் சி பி ரசிகர்கள் வம்பு இழுத்து வருகிறார்கள்.
அதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி படுதோல்வி அடைந்து இருக்க வேண்டிய நிலையில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஹர்திக் தனி ஆளாக போராடிய நிலையில் அவர் ரசிகர்களை பார்த்து மேட்ச் ஒன்சைடாக போனதா என்று கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *