Ranipet R.Gandhi: 1 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்!

Advertisements

வாலாஜாபேட்டை நகராட்சியில் ஒரு கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட காகிதகாரத்தெருவில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தைத் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் மேற்கூரை மற்றும் SFC பள்ளி மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளியின் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணைத்தலைவர் கமல்ராகவன், நகராட்சி ஆணையாளர் கூடுதல் பொறுப்பு மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர் சண்முகம், நகர மன்ற உறுப்பினர்கள் லதா ஜெய்சங்கர், இர்ஃபான், என்.டி.ரவிச்சந்திரன், தீபா சசிகுமார், செந்தில்குமார், பிருந்தா சிலம்பரசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்சா பிரியா, மேற்பார்வையாளர் ஆனந்தி, அங்கன்வாடி பணியாளர் பல்லவி, நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சந்தானலட்சுமி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *