
2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தானே பாமக தலைவர் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தானே பாமக தலைவர் என்றும், தேர்தலுக்குப் பிறகு அனைத்தையும் அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்றார். அமைச்சர் பதவி உள்ளிட்ட எதனையும் தான் எதிர்பார்த்தது இல்லை என்றும், தனக்கு மக்கள்தான் முக்கியம் என்றும், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதாகவும், பாமக கூட்டணி குறித்து தானே முடிவு எடுப்பேன் என்றார். மேலும், அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்தார்.
