அஜித் பவாரின் மரணம் முன்னரே கணிக்கப்பட்டதா? ஜோதிடம் உடைத்த உண்மை.!

Advertisements

மகாரஸ்டிர துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி, அஜித்பவார் பாராமதியில் விமான விபத்தில் இறந்து போவார் என்று தான் முன்னரே கணித்திருந்ததாக தெரிவித்துள்ளார். இவர், தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு கிடைக்கும் வெற்றி வாய்ப்பு குறித்தும் ஏற்கனவே கணித்து கூறியுள்ளார்.விஜய் பற்றி அவர் சொன்னது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார், நேற்று பாராமதியில் நடந்த விமான விபத்தில் பலியானார். அவரது உடல் இன்று காலை 11 மணியளவில் பாரமாதியில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது.  மும்பையில் இருந்து பாரமதிக்கு விஎஸ்ஆர் நிறுவனத்தின் Learjet 45 என்ற விமானத்தில் பயணித்த போது, இந்த விபத்து நடந்தது.

விமானத்தில் பைலட்டுகள் உதவியாளர்கள் என அனைவருமே இறந்து போனார்கள். அஜித் பவாரின் மரணத்தையடுத்து,  பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதாக அஜித்பவார் அறிவித்த சில தினங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இதனால்,சதி திட்டம் காரணமாக இருக்கலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை அஜித்பவாரின் சித்தப்பா சரத்பவார் மறுத்துள்ளார். ‘இது முற்றிலும் விபத்துதான். விபத்தில் எந்த அரசியலும் இல்லை. அரசியல்வாதிகள் யாரும் அஜித்பவாரின் மரணத்தில் அரசியலை கொண்டு வர வேண்டாம் ‘ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாரஸ்டிர மாநில முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ்,’மம்தா பானர்ஜி இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு தலைவரை இழந்து மகராஸ்டிர மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்த சமயத்தில், அசிங்கமான அரசியலை மம்தா பானர்ஜி செய்து வருகிறார் ” என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கிடையே,  அஜித்பவாரின் மரணம் குறித்து முன்னரே தான் கணித்திருந்ததாக பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி தெரிவித்துள்ளார். இவர், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிக்குள் ஒரு மாநிலத்தில் முதல்வராகவோ அல்லது மத்திய அமைச்சராக இருப்பவரோ விமான விபத்தில் பலியாகலாம் .

மூத்த இந்திய அரசியல்வாதியாக அவர் இருக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அஜித்பவார் நேற்று விமான விபத்தில் இறந்ததும் தனது கணிப்பு பலித்து விட்டதாகவும் தான் சொன்னது போல மூத்த அரசியல்வாதி ஒருவர்  பலியாகி விட்டதாக அவர் தனது சோசியல் மீடியாவில் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதேவேளையில், பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
”அஜித் பவார் ஒரு முறை கூட மத்திய அமைச்சராகவோ அல்லது முதல்வராகவே பணியாற்றவில்லை. அவர் , மகாராஸ்டிர மாநில துணைமுதல்வராகவும் , அமைச்சராகவும் மட்டுமே இருந்தார். இதனால், உங்கள் கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது ”என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர், இதுபோன்ற தெளிவற்ற கணிப்புகளைச் செய்வது எளிது என்றும், இறக்கப் போகும் நபர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் குறிப்பிடவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர். பிரசாந்த் கினி  வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒரு படகு வங்காளத்திலோ அல்லது வங்கதேசத்திலோ விபத்தில் சிக்கும். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு பெரிய விமான விபத்து ஏற்படும்.
மார்ச், ஆகஸ்ட் அல்லது நவம்பர் மாதங்களில் ஒரு பெரிய ரயில் விபத்து ஏற்படும் என்றும் கணித்துள்ளார். அதேவேளையில், பிரசாந்த் கினியின் சில கணிப்புகள் உண்மையாகியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. நடிகை சமந்தாவுக்கு 2025 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்திருந்தார். அதே போல, சமந்தாவிற்கு  திருமணம் நடைபெற்றது. வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று கூறிருந்தார்.
அதேபோல, நடந்தது. நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது குறித்தும் அவர் கணித்து கூறியுள்ளார். அவரது கணிப்பில் கூறியிருப்பதாவது, ” 2026 தமிழக  சட்டசபை தேர்தலில் விஜய் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் . 2026 தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கைப் பெறும்.  இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாக்குகள் விஜய்க்குப் பெரிய பலமாக இருக்கும். ஆனால்,  விஜய்யின் ஜாதகத்தில் 2031-ம் ஆண்டு தான் சிம்மாசன யோகம் மிக வலுவாக உள்ளது.
2026 முதல் 2031 வரையிலான 5 ஆண்டுகளில் விஜய் தமிழக மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடிப்பார். இந்த காலக்கட்டத்தில் அவருக்குக் கிடைக்கும் அரசியல் அனுபவம் 2031ம் ஆண்டு  அவரை அரியணையில் அமர்த்தும். விஜய்யின் ஜாதக ரீதியாக சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள் 2030-க்கு பிறகே, அவருக்கு சாதகமாக அமைகிறது.
இதன் காரணமாகவே 2031 ம் ஆண்டு தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் .  அதுமட்டுமல்ல,
விஜய்க்கு ஜனநாயகன் கடைசிப் படமாக இருக்காது.  2028 – 2029 ம் ஆண்டு காலக்ட்டத்தில் அவர் மீண்டும் படத்தில் நடிப்பார். விஜய் நடிக்கும் கடைசிப் படம் 2029ம் ஆண்டு திரைக்கு வரும்”  என்று தெரிவித்திருக்கிறார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *