அன்புமணியுடன் காடுவெட்டி குரு குடும்பம் : அதிர்ச்சியில் ராமதாஸ்.!

மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தற்பொழுது இரண்டாக உடைந்த நிலையில் மகன் , அன்புமணியுடன் கடுமையான மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.  தற்பொழுது ராமதாஸ் தலைமையிலான ஒரு பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணி தலைமையிலான ஒரு பாட்டாளி மக்கள் கட்சியும் தனித்தனியாக போட்டி போடத் தொடங்கியுள்ளன.
இதில் அன்புமணி தலைமையிலான , பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே சமயம் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியாமல் திக்கு முக்காடி வருகிறது .
தற்பொழுது அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி மிக வேகமாகவும் பலமாகவும் செயல்பட தொடங்கி இருக்கிறது . இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் மகள் என அனைவரும் அன்புமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது.  பாட்டாளி மக்கள் கட்சியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அதே சமயம் மருத்துவர் ராமதாஸ் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் .
தமிழக அரசியல் களம் மிகவும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது . இதில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பயணத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறி வருகிறது .
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்கிற வேட்பாளர் பட்டியலும் அன்புமணி தரப்பில் தயாராகி வருகிறது. அந்த வகையில் சௌமியா அன்புமணி வழக்கறிஞர் கே பாலு ஆகிய இருவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என தெரிகிறது .
சௌமியா அன்புமணி தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது . அதேபோல் வழக்கறிஞர் கே பாலு,  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இவர் ஏற்கனவே கடந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதேதொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய தூணாக விளங்கியவர் காடுவெட்டி குரு. வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் மாவீரன் என்று அழைக்கப்பட்ட காடுவெட்டி குரு கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் மரணமடைந்தார் . இதன்பிறகு காடுவெட்டி குரு குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யவில்லை என ராமதாஸ் தரப்பு மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
இதற்கிடையே கடந்த தேர்தல் சமயத்தில் காடுவெட்டி குருவின் மகன் கலையரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார் . அதேபோல் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையும் ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் .
தற்பொழுது வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி காடுவெட்டி குரு பிறந்தநாள் வருகிறது.  இதனை ஒட்டி காடுவெட்டி குருவின் மகன் கலையரசன் அன்புமணியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் . வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி காடுவெட்டி குருவின் பிறந்தநாளை முன்னிட்டு வன்னியர் ஜெயந்தி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த விழாவில் பாமக தலைவர் அன்புமணி கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருக்கிறார் .
பல ஆண்டுகளுக்குப் பிறகு,  கலையரசன் குடும்பத்தினர் அன்புமணியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த சந்திப்பு பாமக அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது . அரியலூர்,  பெரம்பலூர் , கடலூர் போன்ற பகுதிகளில் காடுவெட்டி குருவுக்கும் அவரது மகன் கலையரசனுக்கும் வன்னியர் சமூகம் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது.
இந்த நிலையில் கலையரசன் அன்புமணியைசந்தித்து அழைப்பு விடுத்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது . இது தொடர்பாக கலையரசன் ஆதரவாளர்கள் அன்புமணியை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் . அதேசமயம் காடுவெட்டி குரு குடும்பத்தினர் அன்புமணியுடன் சந்தித்தது ராமதாஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுடன் மருத்துவர் ராமதாஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தற்போது , வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற காடுவெட்டி குரு குடும்பத்தினர் அன்புமணியை சந்தித்து பேசி இருப்பது மருத்துவர் ராமதாசை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *