Whiskey:’விஸ்கி’ பிரியரா நீங்கள்? – பெண்ணாக மாற வாய்ப்பு..அதிர்ச்சி தகவல்!

Advertisements

நாளைல இருந்து அந்தக் கருமத்தைக் கையில தொடவே கூடாது என்று சபதம் எடுக்கும் குடிமகன்கள் அடுத்த நாளே சபதத்தை முடித்துவிட்டு மீண்டும் உற்சாக உலகில் மிதக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. விதவிதமான மது வகைகள் இருந்தபோதிலும் விஸ்கி, பிராந்தி, பீர் ஆகியவற்றை மட்டுமே அதிக அளவில் மது பிரியர்கள் குடித்து வருகிறார்கள். மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற போதிலும் மது பிரியர்களால் அதனை முழுமையாக விட முடிவதில்லை.

குறிப்பிட்ட வகை மதுவை அருந்திப் பழகி விட்டவர்கள் வேறு எந்தப் பிராண்டையும் தொடுவதில்லை. அதே நேரத்தில் ஒரு சிலர் எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவதும் உண்டு. காக்டைல் என்று அழைக்கப்படும் மது கலவையும் பார்களில் பரிமாறப்படுவதுண்டு. இப்படி மது குடிப்பவர்களை விதவிதமாகப் பட்டியல் போட்டுவிடலாம்.

விஸ்கி பிராந்தியை மட்டுமே குடிப்பவர்களில் பலர் அதற்கு மட்டுமே அடிமையாகி தொடர்ந்து பிராந்தியையே குடித்து வருவார்கள். வேறு எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது. அதே போன்று பீர் மட்டுமே குடிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டும் நமக்கு ஆகவே ஆகாது. நமக்கு ஏத்த சரக்கு விஸ்கி மட்டும்தான் என்று கூறிக்கொண்டு போதையில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகமாக்கி விடும் என்று கூறுவார்கள். இதனால் விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வைத் தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது. இதனால் புது மாப்பிள்ளைகளுக்குக் குடிமகன்கள் பலர் மாப்ள… அப்பப்ப விஸ்கிய உள்ள தள்ளிக்க… சரியா ? என்று கிண்டலாகக் கூறுவதும் உண்டு.

இப்படி போதையில் விழுந்து கிடக்கும் விஸ்கி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. தொடர்ச்சியாக விஸ்கி குடிப்பவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.

இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றிக் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றிக் கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்ததில் இது உறுதியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாகச் சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையைக் காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது போன்று விஸ்கி சாப்பிடுபவர்கள் நாளடைவில் முழு மங்கையாக மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே விஸ்கி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சமூக வலைதள பதிவு அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் சோதனை முடிவில் விஸ்கி சாப்பிடுபவர்கள் பெண்களைப் போல அமைதி சொரூபமாகக் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. யாருடனும் அதிகமாக வாதாடாமல் அவர்கள் அடக்க ஒடுக்கமாகப் பெண் தன்மையுடன் மாறி இருந்ததாகவும் கூறப்படுகிறது. சில பெண்கள் என்னதான் தவறு செய்தாலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.

அது போன்ற உணர்வுகளையும் விஸ்கி குடித்த ஆண்களிடம் காண முடிந்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் சம்பந்தம் இல்லாமல் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. எனவே விஸ்கி பிரியர்களே உஷாராக இருங்கள். ஒருவேளை உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கள் பெண்ணாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியொரு சூழல் ஏற்பட்டால் உங்களது வரலாறே மாறி விடும். ஆபத்தும் உள்ளது. நீங்கள் வசந்தாக இருந்தால் வசந்தியாக மாற நேரிடும். கண்ணனாக இருந்தால் கண்ணம்மாவாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

உஷார் உஷார் உஷார்….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *