IPL 2025 : சென்னை -பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் !

IPL 2025:
       வரும் 28-ம் தேதி நடைபெறும் சென்னை -பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *