Advertisements

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. கட்சியில் பொதுச் செயலாளராக பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புசி ஆனந்த் செயல்பட்டு வருகிறார் .
புசி ஆனந்த் பாண்டிச்சேரியில் உள்ள புசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புதுச்சேரி தேர்தல் சமயத்தில் அவர் விஜய் ரசிகர்களை கூட்டாக சேர்த்து பல சமூக சேவைகளை செய்தார் . இதன் அடிப்படையில் அவருக்கு வெற்றி கிடைத்தது . மேலும் இதனை முன்வைத்து நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திர சேகரை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் உடன் சந்திப்பதற்கு எஸ் ஏ சந்திரசேகர் ஏற்பாடு செய்தார். தனது தீவிர பணிகளால் நடிகர் விஜய் மனதில் புசி ஆனந்த் நீங்காத இடம் பிடித்தார் . ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய்யின் வலதுகரமாக செயல்பட்ட புசி ஆனந்த் தன்னிடம் கொடுத்த பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் .
இதற்கிடையே கட்சியை பலப்படுத்துவதற்காக ஜான் ஆரோக்கியசாமி ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் அருண் ராஜ் ராஜ்மோகன் என பலரை முக்கிய ஆலோசகர்களாக விஜய் நியமித்தார் . இதில் ஆரம்பம் முதலே ஜான் ஆரோக்கியசாமிக்கும் புசி ஆனந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவுக்கும் புசி ஆனந்துக்கும் ஒத்துப் போகவில்லை எனவே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொண்டனர் . மதுரை மாநாட்டில் இந்த மோதல் உச்சகட்டமாக வெடித்தது இதற்கு பின்னர் கரூர் சம்பவத்திலும் ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார் கொடுத்து வருகிறார்கள் .
இதனிடையே தற்பொழுது ஜான் ஆரோக்கியசாமி சிறந்த முறையில் செயல்படுவதாக நடிகர் விஜய் நம்பத் தொடங்கி இருக்கிறார் அந்த வகையில் புசி ஆனந்தின் செயல்பாடுகளில் சில குழப்பங்கள் இருப்பதாகவும் கருதுகிறார் . இதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தில் முழுமையான மாற்றங்கள் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார் .
அந்த வகையில் முதல் கட்டமாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து புசி ஆனந்த் நீக்கப்படுகிறார் பதிலுக்கு அவர் பாண்டிச்சேரி மாநில தமிழக வெற்றி கழக தலைவராக பதவியேற்கிறார் . ஏற்கனவே எஸ்ஏ சந்திரசேகருக்கும் புசி ஆனந்துக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்பொழுது புசி ஆனந்த் முழுக்க முழுக்க தமிழகத்தை விட்டு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார் .
இதன் மூலம் சந்திரசேகர் மற்றும் விஜய் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வரும் என தெரிகிறது . இது மட்டுமல்லாமல் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவை நியமிக்கலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார் . விஜய் எனவே விரைவிலேயே அதாவது நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா தற்பொழுது தமிழக வெற்றிக்கழக தேர்தல் பணி குழு செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. ஜான் ஆரோக்கிய சாமியை பொருத்தவரையில் ஆலோசனை குழுவின் தலைவர் பதவி வழங்கப்படுகிறது கூட்டணி உட்பட வேட்பாளர்கள் வரை ஜான் ஆரோக்கியசாமி க்கு முக்கியத்துவம் தரலாம் என விஜய் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் .
இது தவிர முக்கிய ஆலோசகர்களான நிர்மல் குமார் அருண் ராஜ் ராஜ்மோகன் ஆகியோர் வகிக்கும் பதவிகளும் மாற்றம் செய்யப்பட இருக்கின்றன . உச்சகட்டமாக சுசி ஆனந்த் மூலம் நியமிக்கப்பட்ட ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என்ற ஆய்வுத் தகவல் நடிகர் விஜய் இடம் சொல்லப்பட்டு இருக்கிறது .
இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட இருக்கிறார்கள் இது குறித்து ஆதவ் அர்ஜுனா முடிவு எடுத்து செயல்படுவார் என தெரிகிறது . எனவே ஆதவ் அர்ஜுனா தலைமையில் புதிய மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து புசி ஆனந்த் நீக்கப்படுவது ஏராளமான நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் காரணம் தனது பணிக் காலத்தில் புசி ஆனந்த் நிர்வாகிகள் யாருடனும் தொடர்பு கொள்வது கிடையாது. இது தவிர ஏராளமான நிர்வாகிகளிடம் இரண்டு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு பதவி வழங்கியிருக்கிறார். அந்த பணம் எங்கே போனது என்ற கேள்விக்குறி இருக்கிறது .
ஏப்படிப்பட்ட முக்கிய நிகழ்வாக இருந்தாலும் நடிகர் விஜய்யை யாரும் நெருங்காதபடி புசி ஆனந்த் மறைத்துக் கொண்டு ஒரு அரசியல் நடத்தி வந்தார் இதற்கு ஏற்கனவே பலத்த எதிர்ப்புகள் இருந்தன . புசி ஆனந்தை எதிர்த்து அவ்வப்போது உள் கட்சி பூசல்களும் நடைபெற்று வந்தன பலர் தங்களது பொறுப்புகளில் இருந்தும் விலகி வந்தார்கள் .இந்த நிலையில் புசி ஆனந்த் பாண்டிச்சேரி தலைவராக மாற்றப்பட்டது .தொடர்பாக தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் விஜயை சந்திப்பதற்காக மாமல்லபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். நட்சத்திர ஹோட்டலில் மொத்தம் 50 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு அவர்களை அந்தந்த அறைக்கே விஜய் சென்று ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது .
சில குடும்பத்தினர் இறுதிச் சடங்கு சாஸ்திரப்படி 30 நாட்கள் கழித்து தான் வெளியே வருவார்களாம் . எனவே அப்படிப்பட்டவர்கள் தனி விமான மூலம் அடுத்த கட்டமாக சென்னை வந்து விஜய்யை சந்திக்கிறார்கள் . இதனிடையே அவர் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறுவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகிலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல் அவர்களை சென்னைக்கு வரச் சொல்லி ஆறுதல் சொல்வது. இதுதான் முதல் முறை என்று நாம் தமிழர் சீமான் உள்பட பலர் எதிர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements


