
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படம் “கூலி” ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்த இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில், “ஒரு நடிகர் மற்றும் ஒரு ஸ்டாரின் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகரா எனக் கூற முடியாது. ஆனால், ரஜினியை ஸ்டாராகவே அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள்.
ஸ்லோ மோஷன் இல்லையெனில், ரஜினி சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என எனக்குத் தெரியவில்லை. பாதி படத்தில் எதுவும் செய்யாமல், ரஜினி ஸ்லோ மோஷனில் நடிப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
