Rajinikanth: கோவில் கட்டி பூஜை செய்துவரும் தீவிர பக்தன்!

Advertisements

சூப்பர் ஸ்டார்க்கு கோவில் கட்டி சிலை வைத்து பூஜை செய்துவரும் தீவிர பக்தன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  3 அடி சிலை வைத்து கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து அவரது ரசிகர் தினம்தோறும் பூஜை செய்து வருகிறார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார்.  இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார் . வாடகை வீட்டில் வசித்து வரும் கார்த்திக்,  தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைத்து, ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும் , நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வரும் தீவிர ரஜினி பக்தராக மாறியுள்ளார்.


மேலும் மூன்றடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினிக்கு சிலை ஒன்றை செய்து, அந்த சிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து , பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர் , இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து,  மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். அவருக்கு ஒரு உறுதுணையாக பெற்றோர்களும் அவரது மனைவியும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து,  நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்திக்கின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *