அகமதாபாத் விமான விபத்து ஒரு துயர சம்பவம் என, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

அகமதாபாத் விமான விபத்து ஒரு துயர சம்பவம் என, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வரும் நிலையில், பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர்  டெய்லர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்வதாகவும், கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கேட்டதற்கு, அது ஒரு துயரமான சம்பவம் என்று தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்குள் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *