Israel Hamas War Updates: இஸ்ரேல் எச்சரிக்கை!

Advertisements

காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என்று வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, டெல்லியிலிருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது.
அந்த விமானம்மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயானபோரில் காசா முனையில் இதுவரை 1,537 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள் – வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பதிகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


காசாவின் வடக்கு பகுதியிலிருந்து 24 மணி நேரத்தில் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்குச் செல்வது சாத்தியமற்றது. மேலும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *