ஈரானின் உள்ள அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியாமல், இஸ்ரேல் திணறல்.!

ஈரானின் உள்ள அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியாமல், இஸ்ரேல் திணறி வருகிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட  இஸ்ரேல் குற்றம்சாட்டியநிலையில் அதன் மீது opration Rising Lion என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக opration True Promise 3 என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு இரு நாடுகள் இடையே கடந்த 5 நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானில் அணுசக்தி மையங்கள் சேதம் அடைந்துள்ளது.

இருப்பினும் இருப்பினும் ஈரானில் உள்ள  போர்டோ அணுசக்தி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், ஈரான் அதனை கட்டமைந்துள்ளது. குவாம் நகரில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும், தெஹ்ரானில் இருந்து 160 கி.மீ., தொலைவிலும் மலைகளுக்கு அடியில்  போர்டோ அணுசக்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வான்வெளி தாக்குதல் மற்றும் வெளிநாடுகளின் தலையிடுகளில் இருந்து தப்பிக்க ஈரான் இதை அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த அணுசக்கித நிலையத்தை அழித்தால் தான், போர் முற்று பெரும் என கருதும் இஸ்ரேல், அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியாமல் திணறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *