2047-ல் இந்தியா–ஜப்பான் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் – பியூஷ் கோயல்!

2047-ஆம் ஆண்டில் இந்திய-ஜப்பான் இருநாடுகளும் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் வர்த்தக ஆலோசனைக் கூட்டம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,  நமது எதிர்காலக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நமது நாட்டின் வணிகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும், கூட்டுறவும் எவ்வாறு வளரும் என்பது குறித்தும் விவாதிக்க இன்றைய தினம் சிறப்பு வாய்ந்தாக அமையும் என்று குறிப்பிட்டார்.

 

அடுத்த பத்தாண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் தற்போதைய அளவிலிருந்து இரட்டிப்பாகும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டில் நமது சுதந்திரத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது, 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இருநாடுகளும் முன்னேறும் என்று கூறினார். இதை நனவாக்க 140 கோடி இந்தியர்கள் உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *