
சென்னை :
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, சென்னை காவல் சட்டங்களை மற்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கான மசோதா, சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்க வகை செய்யும் மசோதா, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல் மசோதா மற்றும் ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான மசோதா உள்ளிட்டவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.ரன்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.



