Raja Bhujangasana: நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் ஆசனம்!

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் இராஜ புஜங்காசனம்.

நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று பொருள். புஜங்காசனம் பற்றிய பதிவில் பாம்பின் பெயர் சூட்டப்பட்டதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இராஜ புஜங்காசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. எனவே, இவ்வாசனம் பயில்வதால் உடல் முழுமைக்கும் ஆற்றல் கிடைக்கிறது; பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் தன்மை வளர்கிறது; அன்பு, பரிவு ஆகிய குணங்கள் வளருகின்றன; தலையில் உள்ள சக்கரங்கள் ஞானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மையமாக விளங்குகின்றன. பிரபஞ்ச ஆற்றலோடு நமக்குள்ள தொடர்பை அனுபவித்து உணரும் நிலை உருவாகிறது.

பலன்கள்:

இராஜ புஜங்காசனத்தின்  பலன்கள்முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது.
முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது.நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.இருதய இயக்கத்தைச் செம்மையாக்குகிறது.நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது.தோள், கழுத்து மற்றும் மணிக்கட்டைப் பலப்படுத்துகிறது.இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

இடுப்பு, வயிறு, தொடை ஆகிய பகுதிகளில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது.நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீராக வைக்கிறது. அசதியைப் போக்குகிறது.மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்கிறது.மன அழுத்தத்தைப் போக்குகிறது.

செய்முறை:

விரிப்பில் குப்புறப் படுக்கவும். உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பு வரை உடலை உயர்த்தவும். கைகள் வளையாமல் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றவும்.தோள்களை விரிக்கவும்.உள்ளங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றியவாறு கால்களை மடித்து பாதங்களைத் தலையை நோக்கிக் கொண்டு வரவும்.மூச்சை உள்ளிழுத்தவாறு முதுகை நன்றாகப் பின்னால் வளைத்துத் தலையைப் பின்புறம் சாய்த்து பாதங்களின் மேல்வைக்கவும்.30வினாடிகள்இந்நிலையில் இருக்கவும்.மெதுவாகக் கால்களைக் கீழிறக்கி, மேலுடலையும் கீழிறக்கி ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு:

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர இடுப்புப் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப் புண் அல்லது குடலிறக்கம் உள்ளவர்கள் இராஜ புஜங்காசனத்தைத் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *