சென்னையின் பல இடங்களில் மழை!

புதுச்சேரியின் கிழக்கே நிலைக் கொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிசம்பர் 20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 20) முதல் டிசம்பர் 25ம் தேதிவரை மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை துவங்கி மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, எழும்பூர், வில்லிவாக்கம், பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *