தவெக விஜய் பற்றி நக்கலாக பேசிய கி.வீரமணி.!

Advertisements

ஒரு கட்சியைத் தொடங்கியவர் நிர்வாகிகளைச் சந்திப்பதையே அதிசயச் சாதனை போல் சொல்வதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைக் குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விமர்சிம்ததுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் திராவிட கழகத் தலைவர் வீரமணி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பெரியார் உலகம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது.

அப்போது நிர்வாகி ஒருவர் ஒன்றரை இலட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, ஒரு கட்சியைத் தொடங்கியவர் நிர்வாகிகளைச் சந்திப்பதையே அதிசயச் சாதனை போல் சொல்வதாகத் தமிழக வெற்றிக் கழகத்தையும் விஜயையும் மறைமுகமாக விமர்சித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *