முதலமைச்சரின் போலிப் பிம்பம் நீண்ட காலம் நீடிக்காது – மு.க.ஸ்டாலின் தாக்கு.!

தன் போலிப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் முதலமைச்சரின் எண்ணம் நீண்ட காலம் நீடிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போதைப்பொருள் பயன்படுத்தியது போல் ‘தக் லைஃப்’ (Thug Life) ஸ்டோரி போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராடிய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தவெக ஆட்சியை விமர்சித்ததால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதுடன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரை மிரட்டியும், ஊடகங்களுக்குப் பதிலளிக்காமலும், கட்டமைக்கப்பட்ட தன் போலிப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் முதலமைச்சரின் எண்ணம் நீண்ட காலம் நீடிக்காது என்று தெரிவித்தார்.

அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் விரைவில் அடங்கும். ‘டேக் டைவர்ஷன், டேக் டைவர்ஷன்’ என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *