ஊழல் சக்தி என விமர்ச்சித்த , விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய எடப்பாடி.!

Advertisements

ஊழல் சக்தி என விமர்ச்சித்த , விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய எடப்பாடி…

துரோகி ops – க்கு எப்போதும் இடமில்லை என்று சொன்னதன் பின்னணி என்பதனை குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒவ்வொரு நாளும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. விஜய் பிரவேசத்தால் நான்கு முனை கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம், ஆனால் நாங்கள்தான் அரசியல்வாதி என பேசியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில்தான் தமிழகத்தில் மிக முக்கியமான சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்சி துவங்கியிருந்தார். திமுகதான் அரசியல் எதிரி என்ற கூற்றை முன்வைத்து திமுகவிற்கு எதிராக கடுமையான அரசியல் வாதங்களை முன்னெடுத்து வந்தார். ஆனால் அவர் எப்போதும் அதிமுகவை பெருமளவில் விமர்சிக்காமலே இருந்து வந்தார்.

கொள்கை எதிரியாக பாஜகவை முன்னிறுத்தியபோதும், விஜய் மிகவும் soft -ஆகவே பாஜகவை handle செய்து வந்தார். இதற்கு இடையில்தான் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடியை பார்த்து, ‘கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாச்சு” என பேசியிருந்தார்..

அந்த சமயத்தில்தான் விஜய் தவெக உடன் இணைந்து விடுவாரோ என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் அதிமுக தரப்பிலிருந்து பலரும் போய் விஜயுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் தமிழ்நாட்டில் 4 முனை கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுவெளியில் எடப்பாடியை பெரிதாக தாக்காமல் இருந்த எடப்பாடி, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் விஜய்யை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி விஜய் மக்களுக்கு என்ன செய்தார்? அவர் எப்போது மக்களை சந்தித்தார்? என கேள்வி எழுப்பினார் தொடர்ந்து பேசிய அவர், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த அனைவரும் விஜய் என்ற ஒரு நபரை பார்க்க வந்தவர்கள், அவர்களை நோக்கி ஏன் நேரடியாக செல்லவில்லை? மக்களை நேரடியாக சந்திப்பது தான் அரசியல் என கடுமையாக பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அவர் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால் நாங்கள்தான் சிறந்த அரசியல் வாதி. இத்தனை நாட்களாக இந்த ஆட்சியை எதிர்த்துகூட பேச முடியவில்லை. அதுவரை திரைப்படத்தில் நடித்துக் கொண்டுதானே இருந்துள்ளார் என பேசியுள்ளார். விஜய்யின் வரவு எதிர்பார்த்த எடப்பாடி தற்போது விஜயை தாக்கி பேசியுள்ளார். மேலும் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டையும் கடுமையாக சாடியுள்ளார்.

விஜயின் வரவை எதிர்பார்த்த எடப்பாடி தற்போது அவரை கடுமையாக சாடியுள்ளது பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் , சேலம் ஓமலூரில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஓபிஎஸ்க்கு கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்த்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.இந்நிலையில் , ஓ. பன்னீர்செல்வமும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.

தனிக்கட்சி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேவையற்ற குழப்பங்களை மக்களிடம் பரப்ப வேண்டாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இணைய வேண்டும் என்பது டிடிவியின் ஆசை. ஒன்று சேர நான் ரெடி. அதிமுகவில் சேர்க்க டிடிவி தினகரனும் அவரது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா என்பதை கேட்டுச்சொல்லுங்கள். டிடிவி தினகரனை மட்டுமல்லாது தன்னையும் இணைத்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *