Rachitha Mahalakshmi: 2 வது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Advertisements

கணவர் தினேஷுடன் இனி வாழ போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கும் ரச்சித்தா மஹாலட்சுமி… இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த ரச்சித்தா , கன்னட சீரியல்களில் அறிமுகமாகி இருந்தாலும்… இவரை அரவணைத்து, அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது என்னவோ தமிழ் சீரியல்கள் தான். 2011 ஆம் ஆண்டு முதல் 2012 வரை, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் அறிமுகமான ரச்சித்தா மஹாலட்சுமி , இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபாலசுவாமியை காதலிக்க துவங்கினார்.

இந்த சீரியலை அவர் நடித்து முடிந்த கையேடு 2013-ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ரச்சித்தா மஹாலட்சுமி, இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், அம்மன் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்தார்.

தமிழ் சீரியல்கள் மட்டும் இன்றி, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.

அதே போல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், 91 நாள் நின்று விளையாடிய நிலையில்… பின்னர் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் ரச்சித்தா இருந்த போது கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்த தகவல் பேசுபொருளாக மாறியது.

ரச்சித்தா பிரிய நினைத்தாலும், தினேஷ் தன் மீதுள்ள தவறை உணர்ந்து அவருடன் மீண்டும் வாழ ஆசைப்பட்டதை…  சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விளையாடிய போது பல முறை வெளிப்படுத்தினார். ஆனால் ரச்சித்தா தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரச்சித்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் ஒன்று…. சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தினேஷிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளதாகவும், அவர் பிரபல கன்னட இயக்குனர் ஒருவரை தான் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரச்சித்தா மற்றும் தினேஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *