Chaitra Reddy: விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகம்!

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ள தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி, 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் சீரியல் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, தமிழில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடித்து வந்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து விலகியதால்… அவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதுவே அவரது முதல் தமிழ் சீரியலாகவும் அமைந்தது.

இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லையாக நடித்து அதிரவைத்தார். இதையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதுவும் தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்தார்சைத்ரா ரெட்டி. எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் TRP-யில் டாப் இடத்தில் உள்ளது. அதே போல் மற்ற சீரியல்களை விட இந்த சீரியல் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான ரீச்சை பெற்று தந்தது.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சின்னத்திரையில் நாயகியாக கலக்கி வந்த சைத்ரா ரெட்டி, தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். ‘விஷமக்காரன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள தகவலை சைத்ரா ரெட்டி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது, அழகுகலை பயிற்சி அளிக்கும் மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சைத்ரா ரெட்டி… எந்த நிறத்தில் இருந்தாலும் அழகு தான், எப்படி இருந்தாலும் அழகு தான், அந்த அழகை மெருகேற்ற தான் மேக்கப் போடுகிறோம் என தெரிவித்த அவர் தான் நடிக்கும் படம் குறித்தும் சில வார்த்தைகள் பேசி, ரசிகர்கள் தனக்கு கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இதை தெடர்ந்து ரசிகர்கள் பலர் சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *