
நடிகை ராய் லட்சுமி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்… தென்னிந்திய திரையுலகில் முத்த காட்சி எடுக்கப்டுவது குறித்தும், மலையாள திரையுலகம் பற்றியும் பேசியுள்ளார்.
தமிழில் சினிமாவில், முன்னணி நடிகை என்கிற இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும்… கடந்த 15 வருடங்களுக்கு மேலாக, தமிழில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ராய் லட்சுமி. கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்த ராய் லட்சுமி, பின்னர் அதிரடியாகத் தமிழில் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

தளபதி விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் 2005-ஆம் ஆண்டு, ஹீரோவாக அறிமுகமான ‘கற்க கசடற’ திரைப்படம் தான் லட்சுமியின் முதல் படமாகும். இதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் நடிக்கத் தொடங்கிய இவர், கொஞ்சம் தூக்கலாகக் கவர்ச்சி காட்டியதால்… ஹீரோயின் என்கிற அந்தஸ்திலிருந்து தடம் மாறிக் கவர்ச்சி நாயகியாகவே பல படங்களில் அறியப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளைக் கடந்து… பாலிவுட் திரையுலகில் ஜூலி என்கிற படத்திலும் நடித்தார். இந்தப் படத்தில் அரை நிர்வாணமாக ராய் லட்சுமி நடித்த ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் இந்தப் படத்தின் தோல்வியால், அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
கடந்த ஒரு வருடமாக, முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிக்கக் கூட முடியாமல்… வீல் சேரில் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே இவர் நடிக்க இருந்த பல படங்களில் வாய்ப்பு ராய் லட்சுமி கையை விட்டு நழுவியதாகக் கூறப்பட்டது.
தற்போது மீண்டும் உடல்நலம் தேறி, திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ராய் லட்சுமி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், லிப் லாக் காட்சிகள்குறித்து எழுபட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் யாரும் போல்டாக லிப் லாக் காட்சிகளை எடுப்பதில்லை. ஏமாற்றி விடுவார்கள். ஆனால் நான் பாலிவுட்டில் தான் இது போன்ற போல்டான காட்சியில் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.
அதே போல் மலையாள சினிமா குறித்து எழுபட்ட கேள்விக்கு, எதையும் வாழ்வியலோடு எதார்த்தமாகப் படமாக்க வேண்டும் என நினைப்பார்கள். கவர்ச்சி, முத்த காட்சி போன்றவை கதைக்கு அப்பாற்பட்டது தான் மலையாள திரையுலகில் அது தான் எனக்குப் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

