பொறியியல் கலந்தாய்வு ஜூலை 13-ல் தொடக்கம் – அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!

பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு ஜூலை 13 ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவத்துள்ளார்.

சென்னையில் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, பொறியியல் கல்லூரியில் சேர 3 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதில், 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள், 1 லட்சத்து 5 ஆயிரம் லட்சம் மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.   தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், வருகின்ற 6 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அணுகி குறைகளை பதிவிடலாம் என்று கூறினார்.

 

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆப் பெற்றுள்ளனர் என்றும் பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு ஜூலை 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார். பொறியியல் தரவரிசை பொதுப்பிரிவில் தருமபுரி மாணவி அக்‌ஷிதா முதலிடம் பிடித்துள்ளார் என்றும் திருப்பூர் மாணவி ரோகித் பாலன் 2ம் இடம் பிடித்துள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *