Sexual harassment: மகள்களை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

Advertisements

தனது பள்ளி படிக்கும் இரண்டு மகள்களை 4 ஆண்டுகளாக தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இருக்கும் பள்ளியில் 15 மற்றும் 17 வயதில் இரு சகோதரிகள் படித்து வருகின்றனர். இருவரும் வகுப்புகளில் கவனம் செலுத்தாமல் மன உளைச்சலில் இருந்துள்ளனர். அதை பார்த்த வகுப்பு ஆசிரியர்கள் சிறுமிகள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளார். அதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமிகள் இருவரையும் அவர்களது தந்தையே கடந்த  4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்தது. தனது தந்தைக்கு வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதாகவும், தாய் மட்டுமே வேலைக்கு செல்வதாகவும் குறிப்பிட்ட சிறுமிகள், தந்தை இருப்பதால் அவருடன் தனியாக இருக்க அச்சப்பட்டு பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் பூங்காவில் காத்திருந்து, தாய் வந்ததும் செல்வோம் என கூறியுள்ளனர்.

சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்த அறிந்த பள்ளி ஆசிரியர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிதுள்ளார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பெற்ற மகள்களிடமே மிருகத்தனமாக நடந்து கொண்ட தந்தையை கைது செய்தனர். சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பும், மன நல ஆலோசனைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத்த போக்குடன் நடந்து சென்று உதவி கேட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அது மறைவதற்குள், தந்தையே சிறுமிகளை வன்கொடுமை செய்தது, பெண் பிள்ளைகள் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தலையே ஏற்படுத்தியுள்ளது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் பயப்படாமல் உடனடியாக வெளியே கூறும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *