ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது எனத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகக் கடந்த, 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள, 70 தொகுதிகளுக்கு வரும், 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி, சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்- சம்பா மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
பூபேஷ் பாகேல் அரசு முதற்கட்ட தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.