ஆர்.சி.பி-யை வீழ்த்தியது லக்னோ……..!

Advertisements

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டியில் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, திடீரென மழைப் பெய்ததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், மழை நின்றப் பின் போட்டி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பந்து வீச்சு 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி, லக்னோ அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 209 எடுத்தது. இதில், அதிரடியாக விளையாடிய மிச்செல் மார்ஸ் 111 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அணியின் கேப்டன் ரஜத் படிதார் சிறப்பாக விளையாடி 61 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *